2021 ஆம் ஆண்டிற்கான மஹல்லாவின் ஜமாத் உறுப்பினர்களின் விபரங்களை புதுப்பிக்க அத்னான் ஜும்மா பள்ளிவாயலின் நிர்வாகம் முடிவு செய்துள்ளது என்பதை உங்களுக்கு அறியத்தருகின்றோம்.
மேலும் பின்வரும் காலங்களில் கீழே பட்டியலிடப்பட்டுள்ளபடி அத்னான் ஜும்மா பள்ளிவாயலின் அனைத்து விடயங்களின் மூலம் பயன்பெற மஸ்ஜிதின் உறுப்பினர் அட்டை கட்டாயமாக தேவைப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அத்னான் ஜும்மா பள்ளிவாயலின் மூலம் பயன்பெறும் விடையங்களாவன:
- ரமழான் மாதத்திற்கு விநியோகம் செய்யப்படும் ஈத்தப்பழங்களை பெற்றுக்கொள்ளுதல்.
- நிவாரணப்பொதியை பெற்றுக்கொள்ளுதல்.
- குர்ஆன் மத்ரஸாவிற்கு சேர்வதற்கான நுழைவு படிவத்தை பெற்றுக்கொள்ளுதல்.
- பொலிஸ் அறிக்கை, மற்றும் திருமணம் போன்ற விடயங்களுக்கான பள்ளிவாயலின் சான்றிதழ் கடிதத்தை பெற்றுக்கொள்ளுதல்.
- திருமணங்கள் மற்றும் ஏனைய நிகழ்வுகளுக்கான கூடாரங்கள் (விதானம்) மற்றும் நாற்காலிகளை பெற்றுக்கொள்ளுதல்.
- ஜனாசாவிற்கான சுந்தூக்கை பெற்றுக்கொள்ளுதல்.